சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்கப் பிரிவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட சாரதா சிட் பண்டு நிறுவனம் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வசூலித்து திருப்பி கொடுக்க முடியாமல் ஏமாற்றியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் அந்த சாரதா நிறுவனர் சுதீப்தா சென் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 25 முறை ஆஜராகி வாதடிய நளினி சிதம்பரத்திற்கு சாரதா சிட் பண்டு நிறுவன கணக்கில் இருந்து பெருந்தொகை மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் அமலாக்க துறைக்கு கிடைத்தது. இந்நிலையில், இந்தப் பணம் எவ்வாறு வழங்கப்பட்டது உள்ளிட்ட விபரங்கள் தொடர்பான விசாரணைக்காக, கடந்த ஆண்டு 2017ம் ஆண்டு செப்டம்பர் 23 ஆஜராகும்படி, நளினிக்கு அமலாக்கத் துறை கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை எதிர்த்து நளினி சிதம்பரம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.