வீட்டிற்கே வரும் ரேஷன் பொருட்கள்! அரசு பரிசீலனை!

சற்றுமுன் தமிழகம்
ration
ration

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக அரசு எடுத்துள்ள முடிவு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா தொற்றுக் அதிகரித்து வருவதால், இதன் பரவலை கட்டுப்படுத்த, அரசு பல விதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன் ஒரு கட்டமாக, அதிக கூட்டம் கூடும் இடங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தப்படுகிறது.

மேலும், 100 பேர் மட்டுமே கல்யாணங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்றும், 10 பேர் மட்டுமே கோவிலில் நடக்கும் திருமணங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

இதனைதொடர்ந்து, திரையரங்கம் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் 50 சதவிகித மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

ஒரு பக்கம், இப்படி எல்லா பொது இடங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், சராசரி மக்கள் அதிகமாக கூடும் இடமான நியாய விலை கடையில் கொரோனா தொற்று அதிகமாக பரவ வாய்ப்புள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில், மொத்தம் 32 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ள நிலையில், சுமார் 2.10 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் இதனால் பயனடைந்து வருகின்றனர்,

அதனால் இங்கும் எல்லா இடங்களை போலவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், சாதாரணமான மக்கள் பெரிதளவில் பாதிக்கப்படுவர்.

இதனால், தமிழக அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களை தொற்றிலிருந்து பாதுகாக்க, ரேஷன் பொருட்களை நேரடியாக வீட்டிற்கே கொண்டு சென்று விநியோகம் செய்ய திட்டமிட்டு இதற்காக அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அரசின் இந்த திட்டத்தினால் மக்கள் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட்டு, தொற்று பரவலும் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்த திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.