தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்த்ரேலிய வீரர் டேவிட் வார்னர் கட்டிட தொழிலாளியாக மாறியுள்ளார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டது. தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதில்லை என்று தெரிவித்த வார்னர், தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டு கொண்டார்.
இந்நிலையில், சிட்னியில் 10 மில்லியன் டாலர் செலவில் வீடு ஒன்றை வார்னர் கட்டி வருகிறார். தனது வீடு கட்டும் பணியில் கட்டுமான வேளைகளில் அவரும் ஈடுபட்டுள்ளார். அவர் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் படங்களை அவரது மனைவி வெளியிட்டுள்ளார்.