சச்சின் டெண்டுல்கரின் 45வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது பற்றி பல்வேறு மொழிகளில் தெரிந்து கொள்ள உதவும் வகையில்
கேரளாவில் ‘மாஸ்டர் பிளாஸ்டா் சச்சின் தெண்டுல்கர்’ என்ற பெயரில் நூலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
இந்த நூலகம் குறித்து இதை திறந்துள்ள மலபார் கிறிஸ்துவர் கல்லூரி பேராசிரியர் வசிஷ்ட் மேனிகோத் தெரிவிக்கையில், இந்த நூலகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களும் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்ட சச்சின் தெண்டுல்கரை பற்றியவையே. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி மற்றும் ஹிந்தி போன்ற 11 மொழிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்றார்.