பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், இன்று காலை சரண் அடைந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை வரும் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட பேராசிரியர் முருகன் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். பேராசிரியை நிர்மலாதேவி வாக்குமூலம் அடிப்படையிலேயே முருகன் கைது செய்யப்பட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி கைதாகி சிறையில் உள்ளார். தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது இந்நிலையில் நிர்மலா தேவி மீது மேலும் இரண்டு மாணவிகள் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.