சசிகுமாருக்கு வில்லனாகும் அருண்விஜய் பட தயாரிப்பாளர்

சினி நியூஸ் சினிமா

sasikumar actor 750 - 2026அருண்விஜய் நடித்த ‘குற்றம் 23’ என்ற படத்தை தயாரித்த தயாரிப்பாளர் இந்தர்குமார், தற்போது மீண்டும் அருண்விஜய் நடித்து வரும் ‘தடம்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படம் மிகவிரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் சசிகுமார் நடிக்கும் படம் ஒன்றையும் இந்தர்குமார் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கவுள்ள இந்த படத்தில் அவரே வில்லனாகவும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகுமார் தற்போது ‘அசுரவதம் மற்றும் நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அவர் இந்தர்குமார் படத்தில் நடிப்பார் என்றும், இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக கல்லூரி மாணவி ஒருவர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.