விஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’ படத்தின் அர்ஜூன்

சினி நியூஸ் சினிமா
kolaikaran - 2026
விஷாலின் ‘இரும்புத்திரை’ படத்தில் டிஜிட்டல் வில்லனாக கலக்கிய ஆக்சன் கிங் அர்ஜூன் மீண்டும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘காளி’ படத்தை அடுத்து விஜய் ஆண்டனி நடிக்கவிருக்கும் ‘கொலைகாரன்’ என்ற படத்தில் அர்ஜூன் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் ஹீரோவுக்கு சமமான கேரக்டர் என்பதால் அர்ஜூன் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளது. ஆண்ட்ரூ இயக்கும் இந்த படத்தை தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிக்கவுள்ளார். இவர் விஜய் ஆண்டனியின் பள்ளிக்கால நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிப்பதுடன் இசையும் அமைக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் திருடன், திமிர் பிடிச்சவன் மற்றும் ‘மூடர் கூடம்’ பட இயக்குனர் நவீன் இயக்கத்தில் ஒரு படத்திலும் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.