விஜய் இடத்தை விஜய் ஆண்டனி பிடிக்க உதவிய எஸ்.ஏ.சந்திரசேகர்

Published:

vijay vijayantony1 - 2026விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ரோகினி உள்பட பலர் நடித்த ‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஏ.சந்திரசேகர், ரோகினி, இயக்குநர் விக்கி, நடிகர் ஆர்.கே. சுரேஷ், நடிகைகள் ரோகிணி, உபாசனா ,ஒளிப்பதிவாளர் குகன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது:

இந்த படத்தில் ஒரே காட்சி என்றாலும் நடிக்க ஒப்புக்கொண்ட விஜய் ஆண்டனியை மறக்க முடியாது. அந்த பாத்திரத்தில் விஜய்யை நடிக்க வைக்க இயக்குநர் ஆசைப்பட்டார். ஆனால், விஜய் ஆண்டனி அந்த கதாபாத்திரத்தை பூர்த்தி செய்தார்.

அதேபோல் குஷ்பூ, சீமான், பிரகாஷ்ராஜ். ஆகியோர்கள் சிறிய கேரக்டர் என்றாலும் ஒப்புக்கொண்டு நடித்தார்கள். அவர்களுக்கு என் நன்றி. இந்த படம் சர்ச்சைகள் கொண்ட கதைதான் இது என்பது மறுப்பதற்கில்லை. இது பற்றி எந்த மிரட்டல் வந்தாலும் பயமில்லை. ஏனென்றால் என் முதல் படம் `சட்டம் ஒரு இருட்டறை’ படத்திலேயே மிரட்டல்களைப் பார்த்தவன் நான்.”

இவ்வாறு எஸ்.ஏ.சி பேசினார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img