வாட்ஸ் ஆப்பில் குரூப் வீடியோ கால் வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதுமட்டுமின்றி ஸ்டிக்கர் வசதியும் கொண்டுவரப்பட உள்ளது. இதையடுத்து, குரூப் அட்மினுக்கான அட்வான்ஸ் அம்சங்களும் இதில் சேர்க்கப் படவுள்ளன.
வாட்ஸ் ஆப் நிறுவனத்தை பேஸ்புக் வாங்கியதிலிருந்து பல்வேறு அப்டேட்டுகள் இதில் செய்யப்பட்டு வருகின்றன. அவை மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனர் ஜான் கோம் பேஸ்புக் இயக்குனர்கள் குழுவிலிருந்து விலகியது பலருக்கும் வருத்தமளித்தது.
வாட்ஸ் ஆப் குரூப் காலை பொறுத்தவரையில் ஒரே சமயத்தில் ஒரு குழுவைச் சேர்ந்த 4 பேர் பேசும்படியாக இவ்வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தற்போது வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஒரு நாளைக்கு மட்டும் வாட்ஸ் ஆப் ஆடியோ மற்றும் வீடியோ கால்களில் 2 பில்லியன் நிமிடங்களை பயனாளர் செலவிடுகின்றனர்.
எனவே பயனாளர்களுக்காக வசதியை மேம்படுத்தும் விதமாக இந்த குரூப் காலிங் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு புதிய மொழிகளிலும் வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தப் படவுள்ளது. அதில் 10 இந்திய மொழிகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது



