டிராபிக் ராமசாமியுடன் இணைந்த சகாயம் ஐஏஎஸ்

சினி நியூஸ் சினிமா

traffic ramasamy teaser - 2026சென்னையை சேர்ந்த பிரபல சமூக சேவகரான டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் ‘டிராபிக் ராமசாமி’ என்ற பெயரில் தயாராகி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படம் விரைவில் திரைக்கு வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

இந்த டீசரை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்கள் வெளியிடவுள்ளார். ஒரு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி, ஊழலுக்கு எதிராக போராடு ஒருவரின் திரைப்படத்தை வெளியிடுவது பொருத்தமானது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

டிராபிக் ராமசாமியாக இயக்குநரும் தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ள இந்த படத்தில் அவருடைய மனைவியாக ரோகினி நடிக்கிறார் . மேலும் ஆர்.கே.சுரேஷ், உபாசனா, இமான் அண்னாச்சி, அம்பிகா, சார்லஸ் வினோத், மோகன்ராம், தரணி, சேத்தன், அம்மு, பேபி ஷெரின், விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், கஸ்தூரி, மனோபாலா, மதன்பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் குஷ்பு, சீமான், பிரகாஷ்ராஜ், விஜய் ஆண்டனி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.