கோட்டயம்: நிவாரணப் பொருட்கள் வழங்க சென்ற சீமானை கைது செய்து, விசாரணைக்குப் பின்னர் விடுவித்தனர் கேரள போலீஸார்.
கேரளாவுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கேரள போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அதன் பின் விடுவிக்கப்பட்டார் சீமான். கேரளாவின் கோட்டயத்திற்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.