திருச்செந்தூர் ஶ்ரீசுப்பிரமணியசுவாமி கோவிலில் அபிஷேக கட்டணங்கள் திடீரென உயர்த்தப் பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
முன்னர் அபிஷேகக் கட்டணம் ரூ.200ஆக இருந்தது. அது தற்போது ரூ.500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோல் மாதம்தோறும் வரும் சஷ்டி, விசாகம் உள்ளிட்ட நாட்களில் செய்யப்படும் அபிஷேகத்திற்கும் கட்டணம் ரூ. 2,000 வரை உயர்த்தப் பட்டுள்ளது. இது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




