மாநில கட்சிகளை ஒன்றிணைக்கும் மம்தா பானர்ஜியின் முயற்சிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “பல்வேறு அரசியல் கட்சிகளை ஒன்றாக இணைக்கும் முயற்சிகளை நான் ஆதரிக்கிறேன். பிராந்திய கட்சிகளின் ஒற்றுமை, வலுவான கூட்டாட்சி ஒத்துழைப்பிற்கு திமுக எப்போதும் துணை நிற்கும்” என்றார்.
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும், தெலுங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர் ராவ், காங்கிரஸ், பா.ஜ., கட்சிகளுக்கு மாற்றாக புதிய அணியை ஏற்படுத்தும் திட்டத்தை வெளியிட்டு உள்ளார். அவருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலினுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசி மூலம் பேசி அகில இந்திய அளவில் 3வது அணி அமைக்க ஆதரவு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



