ஐபிஎல் டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்த கவுதம் கம்பீர் கேப்டன் பொறுப்பில் இருந் விலகியுள்ளார். டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல்லில் டெல்லி அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில உள்ளது. கவுதம் கம்பீர் தலைமையில் விளையாடி வரும் இந்த அணி இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இந்த அணி விளையாடிய ஆறு போட்டிகளிலும், கவுதம் கம்பீர் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அவர் அடித்த 55 ரன்களை சேர்த்து 85 ரன்கள் அடித்துள்ளார். மற்ற போட்டிகளில் அவர் சரியா விளையாடவில்லை. இந்நிலையில் இவர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.



