பாங்காக்கில் நடந்து வரும் ஆசிய இளையோர் ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2018-ன் இறுதி நாளான இன்று
குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவின் நித்து, மனிஷா, லலிதா ஆகியோர் தலா ஒரு தங்க பதக்கம் வென்றனர்.
நித்து கான்காஸ் பெண்களுக்கான 48 கிலோ பிரிவிலும், மனிஷா பெண்களுக்கான 64 கிலோ பிரிவிலும், லலிதா பெண்களுக்கான 694 கிலோ பிரிவிலும் தங்க பதக்கம் வென்றனர்.
இந்நிலையில், அங்கீத் கஹண்டன ஆண்களுக்கான 60 கிலோ பிரிவிலும், அனாமிகா பெண்களுக்கான 51 கிலோ பிரிவிலும் வெள்ளி பதக்கம் வென்றனர்.
இதுமட்டுமின்றி ஆஸ்தா பஹ்வா பெண்களுக்கான 75 கிலோ பிரிவிலும், திவ்யா பவார் பெண்களுக்கான 54 கிலோ பிரிவிலும் வெண்கல பதக்கங்களை வென்றனர்.



