
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் மொஹமத் ஹபீஸ் பந்து வீச்சை பல முறை சோதனை செய்த பின்னர், அவரது பந்து வீச்சு விதிகளுக்கு உட்பட்டு இருப்பதாக
சர்வதேச கிரிக்கெட் சங்கம் அறிவித்தது. இதை தொடர்ந்து ஹபீஸ் சர்வதேச போட்டிகளில் பந்து வீச்சை தொடங்க உள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ஹபீஸ் வீசிய பந்து வீச்சு விதிகளை மீறி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். சோதனைக்கு பின்னர் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பந்து வீச அனுமதிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் 2015ம் ஆண்டு ஜூலை மாதம் பந்து வீச்சு விதிகளை மீறி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு, இரண்டாவது முறையாக சஸ்பென்ட் செய்யப்பட்டார். பின்னர், 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் பந்து வீச்சை தொடங்கினார். இருந்த போதும் 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் அபுதாபியில் நடந்த போட்டியின் போது மூன்றாவது முறையாக இதே குற்றச்சாட்டு ஹபீஸ் மீது சுமத்தப்பட்டு நவம்பர் மாதம் சஸ்பென்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



