ஹாக்கி இந்தியா சார்பில், அர்ஜூனா விருது, துரோணாச்சாரியார் விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான மேஜர் தயான் சந்த் விருது ஆகியவற்றுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள பெயர்களை அறிவிக்கப்பட்டது.
இதில், ஹாக்கி வீரர் தரம்வீர் சிங், மன்பீரித் சிங் மற்றும் இந்திய பெண்கள் ஹாக்கி அணி கோல்கீப்பர் சவிதா புனிய ஆகியோர் பெயர்கள் அர்ஜூனா விருது பரிந்துரை செய்துள்ளது. வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் தயான் சந்த் விருதுக்கு சங்கி இபெம்ஹால் சன்னு மற்றும் முன்னாள் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் பரத் சத்ரி ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமன்றி துரோணாச்சாரியார் விருதுக்கு பயிற்சியாளர் பி எஸ் சவுஹான் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.