மேற்கிந்திய தீவுகளில் வரும் 31ம் தேதி மேற்கிந்திய தீவுகள் லெவன் அணிக்கு எதிரான நடைபெற உள்ள ஐசிசி போட்டியில் இந்தியாவின் ஆல் ரவுண்டர் பாண்டியா, மற்றும் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிதி திரட்ட இந்த போட்டி நடத்தப்பட உள்ளது.
ஐசிசி உலக லெவன் அணியில் இங்கிலாந்தின் ஒருநாள் போட்டி கேபடன் இயான் மார்கன், பாகிஸ்தானின் சாஹித் அப்ரீடி, பாகிஸ்தானின் சோயாப் மாலிக், வங்கதேசத்தை சேர்ந்த ஷாகிப் அல் உசேன், வங்கதேசத்தை சேர்ந்த தமிம் இக்பால், இலங்கையின் திசேரா பெரேரா மற்றும் ஆப்கானிஸ்தானின் ராஷித் கான் ஆகியோர் விளையாட உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய வீரர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.