மருத்துவ பரிசோதனைகளுக்காக கடந்த 23ம் தேதி ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றார். மருத்துவ பரிசோதனைகளை முடித்துக்கொண்டு இன்று இரவு அவர் சென்னை திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வந்ததும் முதல்கட்டமாக மக்கள் மன்றத்துக்கு நியமிக்கப்பட்ட 8,500 புதிய நிர்வாகிகளையும் அவர் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் சந்திக்க உள்ளார். அப்போது தனது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து அவர் பேசுகிறார். மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கு முன், பூத் கமிட்டி அமைக்கப்பட்டு, ஒரு பூத்திற்கு 30 கிளைகள் என்கிற வகையில் அடிப்படை பணிகளை முடுக்கிவிட ரஜினி உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஜூன் இறுதிக்குள் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட உள்ளதாக மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன் பின்பே அவரது அரசியல் கட்சி அறிவிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.
ரஜனி இன்று சென்னை திரும்புகிறார்
Popular Categories



