நெல்லை: நீட் தேர்வு எழுதுவதற்காக, நெல்லையில் இருந்து கேரளாவுக்குச் செல்லும் மாணவர்களுக்கான சிறப்புப் பேருந்தை கொடியசைத்து அனுப்பிவைத்தார் நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரள மாநிலத்துக்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்காக, சிறப்புப் பேருந்துகள் இயக்கப் படுகின்றன.
அந்த வகையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்துக்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்காக திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சனிக்கிழமை இன்று காலை 8 மணி முதல் இரவு 11மணி வரை, இடைப்பட்ட நேரத்தில் திருவனந்தபுரத்துக்கும், எர்ணாகுளத்துக்கும் 8 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த சிறப்புப் பேருந்து போக்குவரத்தை, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.