ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தில் இரண்டு நாயகிகள்

சினி நியூஸ் சினிமா

sanchitha shetty - 2026கோலிவுட் திரையுலகில் ஒரே நேரத்தில் அதிக படங்களில் நடித்து வருபவர் விஜய்சேதுபதி மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகிய இருவர் மட்டுமே. இதிலும் ஜிவி பிரகாஷின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் அவர் தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று ஐங்கரன். இந்த படத்தில் ஜிவி பிரகாஷூக்கு ஜோடியாக ஏற்கனவே அம்ரியா தஸ்தூர் நடித்து வரும் நிலையில் தற்போது ‘சூது கவ்வும்’ புகழ் சஞ்சிதா ஷெட்டியும் நடிக்கவுள்ளார். இருவரும் மாறி மாறி ஜிவி பிரகாஷை விரட்டி விரட்டி காதலிக்கும் கேரக்டர்கள் என்று கூறப்படுகிறது.

த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா மற்றும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷே இசையமைக்கவுள்ளதாகவும் இந்த படத்திற்காக அவர் ஐந்து படங்களை கம்போஸ் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் நடைபெற்ற நிலையில், விரைவில் சென்னை மற்றும் காரைக்குடி பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்த படத்தை அரண்மனை’ படத்தைத் தயாரித்த விஷன் மீடியா தினேஷ் கார்த்திக் தயாரித்து வருகிறார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.