வெப்பச் சலனம் காரணமாக உள்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, வானிலை அதிகாரி தெரிவிக்கையில், “தமிழகத்தில் வெயில் அளவு வரும் நாட்களில் படிப்படியாக அதிகரிக்கும். வெப்பச் சலனத்தால் உள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. உள் தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும். கோடை மழை தமிழகத்தில் நீடிக்கும். சென்னையில் அதிகபட்சம் வெப்ப நிலை 28 டிகிரியாக இருக்கும் என்றார்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari