கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி விஷ்ணுப்ரியா கடந்த 2015ம் ஆண்டு உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரினை அடுத்து, இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், விஷ்ணுப்ரியாவின் மரணம் தொடர்பாக ஏதேனும் கருத்துக் கூற வேண்டும் என்றால் மே 9ம் தேதி கோவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி கருத்து தெரிவிக்குமாறு தந்தை ரவிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
டிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், அவரது தந்தை வழக்குத் தொடர்ந்ததை அடுத்து, சிபிஐக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து 2 ஆண்டுகள் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மேல் நடவடிக்கையை கைவிடுவதாக சிபிஐ தற்போது தெரிவித்துள்ளது.