விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே Q 886 சத்திரம் புளியங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் முறைகேடு நடந்ததை கண்டித்தும், முறைகேட்டில் ஈடுபட்ட தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் , முறையற்ற தேர்தலை ரத்து செய்யக் கோரியும் காரியாபட்டி தாலுகா வட்டாட்சியர் முத்துகிருஷ்ணனிடம் அல்லாளப்பேரி மற்றும் வல்லப்பன்பட்டி கிராம மக்கள் தங்கள் ரேசன் அட்டை மற்றும் வாக்களர் அட்டையையும் ஒப்படைப்பதாக மனு அளித்து முற்றுகை போராட்டம் செய்தனர்.
அப்பொழுது வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக வாக்குறுதியளித்தை தொடர்ந்து கலைந்து சென்றனர்