எதிர்வரும் உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் கருத்தில் கொண்டு இந்திய நட்சத்திர பேட்மிண்ட்டன் வீராங்கனை பிவி சிந்து, வீரர்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு தாமஸ் மற்றும் உபேர் கோப்பை போட்டியில் இருந்து ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய பேட்மிண்ட்டன் சங்கம் தெரிவித்துள்ளது.
தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்ட்டன் போட்டிகள் வரும் 20 முதல் 27ம் தேதி வரை பாங்காங்கில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளித்து, குறைந்த அளவிலான வீரர்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.