இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த நெல்லை ஆட்சியர் சந்திப் நந்தூரி கூறும்போது நெல்லை மாவட்டத்தில் உள்ள நம்பியாறு,கருமேனியாறு,கோதையாறு ஆகிய பகுதிகளில் மணல்கடத்தல் நடைபெறுவதை தடுக்க கள அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
மணல்கடத்தல் சம்பவத்தை தடுக்க 07.05.2018 அன்று காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளுடன் இணைந்து கடத்தல்களை தடுக்க நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.இனிமேல் மணல் கடத்தலில் ஈடுபட்டால் குண்டர் தடுப்புச்சட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொண்டு கைது செய்யப்படுவார்கள்.
என நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.