நடிகர்கள் அல்ல யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், இயக்கம் ஆரம்பிக்கலாம் என எம்பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார். நடிகர் அரசியலுக்கு வருவது புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொள்வது போலாகும் என்றும் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை விவகாரத்தில், தமிழக எம்.பி.க்கள் பதவியை ராஜினாமா செய்தால் தான் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்றால், முதல் நபராக பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன் என்று இவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.



