பள்ளி பேருந்துகளை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
5000 அரசுப்பேருந்துகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும். இது தொடர்பான அறிவிப்பு வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிடப்படும் என்றும் பள்ளி பேருந்துகள் முறையாக இயங்குகிறதா என கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
பள்ளிக்கூட வாகனங்களை முறையான அங்கீகாரம் பெற்றுத்தான் இயக்க வேண்டும், பள்ளி வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் உரிய ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும், பெயிண்ட் குறிப்பிட்ட நிறத்தில்தான் இருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..



