11-வது ஐ.பி.எல். போட்டியில் ‘லீக்’ ஆட்டம் முடிந்து ‘பிளேஆப்’ சுற்று இன்று தொடங்க உள்ள நிலையில், கிரிக்கெட் இணைய தளமான கிரிக்இன்போ ஐ.பி.எல். கனவு அணியை வெளியிட்டு உள்ளது.
இந்த அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, அம்புதி ராயுடு இடம் பெற்றுள்ளனர். ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் கனவு அணிக்கு கேப்டனாக இருக்கிறார். ஆல் ரவுண்டர்களான குர்னல் பாண்ட்யா, பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு இந்த அணியில் இடமில்லை.
அணி விபரம்:
லோகேஷ் ராகுல் (பஞ்சாப்),
சுனில் நரீன் (கொல்கத்தா),
வில்லியம்சன் (கேப்டன், ஐதராபாத்),
அம்புதி ராயுடு (சென்னை)
ரிஷப்பண்ட் (டெல்லி)
தினேஷ் கார்த்திக் (கொல்கத்தா)
டோனி (விக்கெட் கீப்பர், சென்னை)
ரஹித்தான் (ஐதராபாத்)
ஆண்ட்ரூ டை (பஞ்சாப்)
உமேஷ் யாதவ் (பெங்களூர்)



