
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் நேற்று நிகழ்ந்த வன்முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் நிலைக்கு சென்றது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகர் சூரியா. அவர் இது குறித்து தெரிவித்தபோது, மக்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆரம்பத்திலேயே பிரச்னையை அரசு தீர்க்க வேண்டும்; போராட்டத்தில் வன்முறை கூடாது, போராடுவதே வன்முறை ஆகிவிடாது; மக்கள் தேவைகளை தீர்த்து வைக்கிற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்



