
தூத்துக்குடியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்.
செவ்வாய்க்கிழமை நேற்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போலீசாரை தாக்குவோம் என்று முன்னரே திட்டமிட்டு, கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் சென்ற போராட்டக் காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கில் இருந்ததால், போலீஸாரால் கட்டுப் படுத்த முடியவிலை. இதை அடுத்து, கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தேசிய அளவில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய நோட்டீஸில், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.



