சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் வேல்முருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்திக்க சென்றபோது தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் வேல்முருகனை போலீசார் கைது செய்து, திருக்கோவிலூருக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையிலடைக்கதிருக்கோவிலூர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டர்.
ஸ்டெர்லைட் டை மூட கோரி சிறையில் உண்ணாவிரதம் இருந்த வேல்முருகனுக்கு சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



