பராமரிப்புப் பணி காரணமாக, ஆதியோகி, தியானலிங்கம் மற்றும் லிங்கபைரவி கோயில்களில் இன்று தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், ஆதியோகி, தியானலிங்கம், லிங்கபைரவி ஆகிய கோயில்கள் உள்ளன. அங்கு நாள்தோறும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோயில்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று இந்தக் கோயில்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, அன்றைய தினம் பக்தர்களின் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



