மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று கரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் நகரில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோயில் வைகாசி திருவிழா கடந்த 14-ம் தேதி தொடங்கி, ஜூன் மாதம் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதன் முக்கிய நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது.
இதையடுத்து, அன்றைய தினம் கரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடுமுறை தினத்துக்கு பதிலாக ஜூன் 2-ம் தேதி அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.



