சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாதிரி சட்டமன்றம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை கூட்டத்தொடரில் பங்கேற்க போவதில்லை என ஸ்டாலின் அறிவிருந்த நிலையில் நாளை மாதிரி சட்டமன்றம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாணை படி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.



