பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடி இந்திய வீரர் போப்பண்ணா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடிய யூகி பாம்பரி தோல்வியடைந்து வெளியேறினார். இன்று நடக்கும் இரட்டையர் பிரிவில் பாம்ப்ரி மற்றும் திவிஜ் சரண் ஜோடி, இந்தோ-பிரான்ஸ் புரவ் ராஜ் மற்றும் பேப்ரிக் மார்ட்டின் ஜோடியை எதிர்கொள்ள உள்ளது. இந்தியாவின் போப்பான்னா – ஹங்கேரியின் டோபாஸ் ஜோடி, சீனா-ஆஸ்திரலிய ஜோடியை எதிர்கொள்ள உள்ளது.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் நடால், காஸ்குயட், ஷபோவாலோவ், கே ஆண்டர்சன் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.



