பிரதான எதிர்க்கட்சியான திமுக-வை சட்டப்பேரவைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகள் சார்பிலும், ஆர்.கே நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் சார்பிலும் வலியுறுத்தப்பட்டது. அப்போது அதற்கு முதல்வர், “திமுகவினர் சட்டப்பேரவையில் பங்கேற்று ஜனநாயகக் கடமை ஆற்றுவதற்கு எவ்வித தடையோ எங்களுக்கு ஆட்சேபணையோ இல்லை” என்று பதிலளித்துள்ளார். அதனை தொடர்ந்து, 2006ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா சட்டப்பேரவையில் தனியொருவராக பங்கேற்றுப் பேசியதையும், 67 முறை குறுக்கீடுகள் இருந்தும் முழுமையாக பதிலளித்ததாகவும் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு ஜெயலலிதா முன்னுதாரணமாக திகழ்ந்தவர் என்றும் முதலமைச்சர் கூறினார்.
சட்டப்பேரவைக்கு திமுக வந்தால் யாரும் தடுக்கப்போவதில்லை- முதல்வர்
Popular Categories



