பாரீஸ் நடந்து வரும் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிசில்
இன்று நடைபெறும் 4-வது சுற்று ஆட்டங்களில் ஆண்கள் பிரிவில் நம்பர் ஒன் வீரரும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவருமான ரபெல் நடால் – ஜெர்மனியின் மேக்சிமிலன் மார்ட்டரர், குரேசியா வீரர் சிலிச் – இத்தாலிய வீரர் பேபியோ போகினி, அர்ஜென்டினாவின் டெல் போட்ரோ – அமெரிக்காவின் இஸ்னர், தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் – அர்ஜென்டினாவின் டியாகோ ஆகியோர் மோதுகிறார்கள்.
பெண்கள் பிரிவில் அமெரிக்கா வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் – ரஷியா வீராங்கனை ஷரபோவா, ருமேனியாவின் ஷிமோனா ஹெலப் – பெல்ஜியத்தின் மெர்டன்ஸ், ஸ்பெயினின் முகுருஜா – உக்ரைனின் லெசியா, ஜெர்மனியின் கெர்பர் – பிரான்சின் கார்சியா மோதுகிறார்கள்.
இதேபோல் நேற்று பாதியில் நிறுத்தப்பட்ட வோஸ்னியாக்கி மோதும் ஆட்டமும் இன்று நடக்கிறது..



