December 5, 2025, 5:16 PM
27.9 C
Chennai

மோடி குறித்து பிரணாப் முகர்ஜி சொன்ன அதிர்ச்சித் தகவல்!

pranab2 - 2025

கடின உழைப்பாளி மோடி!

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. பிரனாப் முகர்ஜி நாக்பூரில் வரும் 6ம் தேதி நடக்க உள்ள ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரனாப் முகர்ஜியின் இந்த முடிவு அக்கட்சியை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் பிரனாப் பங்கேற்க கூடாது என காங்கிரசில் பலர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். அதே நேரம் சிலர் பிரனாப்பிற்கு ஆதராக பேசி உள்ளனர்.

இதுகுறித்து ரீகவுண்டிங் மினிஸ்டர் பா. சிதம்பரம் கூறுகையில், ஆர்.எஸ்.எஸ்., கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரனாப் அவர்கள் அந்த அமைப்பின் தவறான கொள்கைகளை எடுத்துக் கூற வேண்டும் என தெரிவித்துள்ளார். தவிர முஸ்லீம், கிறுஸ்துவ அமைப்புகளும் பிரனாப்பின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரனாப் முகர்ஜி கூறுகையில், ஆர்.எஸ்.எஸ்., கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என பலர் எனக்கு தொலைபேசி மூலமாகவும் கடிதம் மூலமாகவும் தெரிவித்து வருகின்றனர். இவர்கள் யாருக்குமே நான் பதில் சொல்லவில்லை.

காரணம் எது நல்வது எது கெட்டது என்பது எனக்கு யாரும் சொல்ல தேவை இல்லை. அதே நேரம் உங்களது கேள்விகளுக்கு எல்லாம் அந்த கூட்டத்தில் பேசும் போது கண்டிப்பாக பதில் கொடுப்பேன் என்றார்.

இந்த நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிலையம் அவரிடத்தில் பிரதமர் மோடி குறித்து கேள்வி கேட்டுள்ளது.

அதாவது நீங்கள் (பிரனாப்) மத்திய அமைச்சராக இருந்த போது குஜராத் முதல்வராக மோடி இருந்தார். அடுத்து நீங்கள் குடியரசுத் தலைவராக இருந்த போது மோடி பிரதமராக இருந்தார்.

இந்த இரண்டு மோடியின் செயல்பாடுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள். தவிர, இப்போது நீங்கள் சாதாரண மனிதராக இருக்கும் நிலையில் பிரதமராக மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது. இதுதான் கேள்வி.

இதற்கு பிரனாப் அளித்த பதில்…

முதல்வராக, பிரதமராக மோடியிடம் வித்தியாசம் ஏதும் இல்லை. முதல்வராக இருக்கும் போது மாநில வளர்ச்சிக்கு பாடுபட்டார். இப்போது இந்திய வளர்ச்சிக்கு கடுமையாக உழைக்கிறார்.

நான் மத்திய அமைச்சராக இருந்த பொழுது எனக்கு மிகவும் பிடித்த முதல்வராக மோடியே இருந்தார். காரணம் அவரிடம் எதையும் ஒருமுறை சொன்னால் போதும். உடனே அதை புரிந்து கொண்டுவிடுவார்.

குஜராத் வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் போராடி பல்வேறு திட்டங்களுக்கான தொகையை வாங்குவார். எந்த ஒரு திட்டம் குறித்து மிகத் தெளிவாக தெரிந்து வைத்திருப்பார். தவிர, அவரிடம் எந்த துறையைப் பற்றியும் பேசலாம் விவாதிக்கலாம். அவ்வளவு தெளிவானவர்.

எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. முதல்வராக இருந்தவர் எப்படி பிரதமராக செயல்படுவார் என்று. ஆனால் பிரதமாக அவரது செயல்பாடுகள் என்னை பிரமிக்க வைத்தது. எனக்கு தெரிந்து இந்திரா காந்திக்கு பிறகு திறமையான பிரதமர் மோடிதான்.

இவரரது வெற்றி ரகசியங்கள் என பார்த்தால் இவரது மிகக் கடுமையான உழைப்பு. ஒரு நாளில் 16 மணி நேரம் வரை உழைக்கிறார்.

அதைவிட முக்கியம் தான் என்ன செய்யப் போகிறேன் என்பதை மக்களிடத்தில் தெளிவாக பேசுவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு புரிய வைக்கிறார்.

திட்டங்களை அறிவிப்பதோடு இல்லாமல் அது நிறைவேறும் வரை கடுமையாக உழைக்கிறார். சில கட்சிகள் திட்டம் சிறப்பாக போடும். ஆனால் செயல்படுத்தாது. (இவர் காங்கிரசை சொல்கிறார் போலும்)

மோடியின் வெளியுறவு கொள்கை என்னை பிரமிக்க வைத்தது. வலிமையான சீனா, பாகிஸ்தான் பொன்ற நாடுகளை மிக எளிதாக சமாளித்தார். அதே நேரம் அமெரிக்கா, ரஷ்யா இருநாடுகளுடன் நல்ல நட்பு வைத்துள்ளார்.

அண்டைநாடுகள், ஆசிய, ஆப்ரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று அதிக முதலீடுகளை இந்தியா கொண்டு வந்தார். இந்தியாவில் இப்போது வரலாறு காணாத வகையில் அந்நிய முதலீடகள் உள்ளது.

இவரது மேக் இந்தியா, டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மின்சார உற்பத்தியில் இந்தியா 100 சதவீதம் முழுமை பெற்றுள்ளது.

இவர் கொண்டு வந்த திட்டங்களில் எனக்கு மிகவும் பிடித்தது பண இழப்பு மற்றும் ஜி. எஸ்.டி. இந்த இரண்டும் இந்திய பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தயது.

இந்த இரண்டு திட்டத்திற்கும் கடும் எதிர்ப்பு இருந்தது. ஆனால் எதிர்ப்பை மீறி துணிச்சலாக செயல்பட்டு இன்று உலக நாடுகளை இந்தியா பக்கம் திரும்ப செய்துவிட்டார்.

மோடியுடன் நான் பணியாற்றிய காலம் பொற்காலம். இவர் அடுத்த முறையும் பிரதமராக தொடர்ந்தால் இந்தியா வல்லரசு ஆகும் என்பதில் சந்தேகமில்லை.

நாட்டிற்கு கிடைத்த நல்ல பிரதமர் மோடி. அவர் அதிக ஆயுலுடன் இருக்க பிராத்தனை செய்கிறேன். இவ்வாறு பிரனாப் முகர்ஜி கூறினார்.

– தமிழ்ச் செல்வி

7 COMMENTS

  1. பெரும்பாலான, அறிவார்ந்த, மக்களின் கருத்துக்களையே மிகவும் ஆணித்தரமாக பதிவு செய்து அற்பங்களின் மூக்கில் இரத்தம் வரச்செய்து விட்டார். சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

  2. அடப் பாவிகளா, எந்த பேப்பரும் இந்த news உம் போடல. TV ல கூட வரல. இதையும் நம்புரானுக. நாடு உருப்படும்

  3. எந்த தொலைக் காட்சி பேட்டி எந்த தினத்தில் நடந்தது என்ற தகவல்களையும் வெளியிடுங்கள். மோடியை பற்றி எழுதியுள்ளது உண்மைதான் என்றாலும்.. இதை பிறப்பு தான் சொன்னாரா என்பதில் எனக்கே சந்தேகம் உள்ளது. மோடியை பற்றி பிரணாப்புக்கு நல்லெண்ணம் இருந்தாலும் இவ்வளவு வரிந்து கட்டிக் கொண்டு பரிந்து பேச மாட்டார். எனவே இது போன்ற நிகழ்வுகளில் எந்த டீவி.. எந்த மீடியா எந்த மாதம் நிகழ்ந்தது என்பதையும் வெளியிடுங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories