தமிழக கோயில்களில் உள்ள கடைகளை காலி செய்ய டிசம்பர் 31 வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தை தொடர்ந்து கோவில்களில் உள்ள கடைகளை காலி செய்ய இந்து அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்தது. .
இதற்கு எதிராக மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், திருச்சி மலைக்கோட்டை, திருவரங்கம் அரங்கநாதர் கோயில், நெல்லை நெல்லையப்பர் கோயில், சங்கரன்கோவில் சங்கரநயினார் கோயில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், சுசீந்திரம் தானுமாலைய பெருமாள் கோயிலில் கடைகள் நடத்தி வருவேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிமன்றம் தமிழக கோயில்களில் உள்ள கடைகளை காலி செய்ய டிசம்பர் 31 வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது



