ஒரு பொய் செய்தி எவ்வளவு வேகமாக பரவுகிறது.அந்த பொய் செய்தியை வைத்து எத்தனை கருத்துக்கள்..
நாட்டின் ஜனாதிபதி குடும்பத்தினருடன் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றார். அவரை அங்கிருக்கும் பூசாரி தலித் என்பதால் கோயிலின் கருவறைக்கு அனுமதிக்காமல் கோயிலின் வெளியே வைத்து பூசை நடத்தினார் என சில ஊடகங்கள், குறிப்பாக சமூக ஊடகங்களில் வேகமாக பரப்புகின்றனர்.
ஜனாதிபதிக்கு செய்து வைக்க வேண்டிய பூஜை தம்பதி சமேதராக செய்யப்பட வேண்டும், ஜனாதிபதி மேதகு ராம்நாத் கோவிந்த் அவர்களின் மனைவியால் அங்கிருந்த படிக்கட்டுகளில் ஏறி கோயிலுக்குள் வரமுடியாது என முன்பே தெரிவித்த காரணத்தினால் அந்த பூஜை கோயில் வெளியே உள்ள தளத்தில் நடை பெற்றது. ஜனாதிபதி அவர்களின் மகளை நானே கோயிலின் கருவறைக்குள் அழைத்துச் சென்று பூஜை செய்வித்தேன் என தலைமை பூஜாரி தெரிவிக்கிறார்.
ஆனால் நமக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு இது தான் என பொய்ச் செய்தியே ஆனாலும் இதனை வைத்து பாஜக அரசின் மீதும், இந்துத்துவத்தின் மீதும் களங்கம் கற்பிக்க ஆரம்பித்து விட்டனர் போராளிகள்…
ஆனால் உண்மைச் சம்பவம் நடந்தது நடைப்பெற்று வருகிறது மேற்கு வங்கத்தில்…இதுவரை இரண்டு தலித் இளைஞர்கள் கொடூரமான முறையில் கொன்று மரத்தில் தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளனர். காரணம் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.கவிற்காக வேலை செய்தார்கள் என்பதால் கொலை செய்யப்பட்டனர்…
சகிப்புத்தன்மை குறித்து பாடம் எடுப்பவர்கள் எளிதாக கடந்து செல்கின்றனர்!!!
கருத்து: – ராஜேஷ் ராவ்




