December 5, 2025, 8:44 PM
26.7 C
Chennai

நான் ஒரு சமூக விரோதி: கமல்ஹாசனின் ஒப்புதல் வாக்குமூலம்!

16 May 21 Kamal - 2025

நானும் ஒரு சமூக விரோதிதான் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தூத்துக்குடியில் போராட்டம் நடத்துபவர்கள் சமூக விரோதி என்றால், தானும் சமூக விரோதிதான் என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்திப்பதற்காக பெங்களூரு புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தமிழகத்திற்கான தேவை குறித்து, குமாரசாமியிடம் பேச இருப்பதாகவும், காலா பட பிரச்னையை வியாபாரிகள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக ரஜினி தெரிவித்தது அவரது சொந்த கருத்து என்று குறிப்பிட்ட கமல், போராட்டத்தை நிறுத்தக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள், 99 நாட்கள் அமைதியாகப் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, போராட்டத்துக்கான உதவிகளைச் செய்துவந்தது மாவட்ட காவல் துறை. நூறாவது நாளிலும் அமைதிப் போராட்டம் நடத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தப் படும் என்று கூறியிருந்தனர் மக்கள்.

எனவே அதற்கு ஏற்ப, வழக்கமான அமைதி வழிப் போராட்டம் என நினைத்து, குறைவான காவலர்களையே பாதுகாப்புக்கு நிறுத்தி, காவல் துறை ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், ரகசியமாக வன்முறை போராட்டக் குழுக்களில் இருந்து ஊடுருவிய சிலர், முகத்தில் அடையாளம் தெரியாத அளவுக்கு துணியால் கட்டிக் கொண்டு, கம்பு கட்டை ஆயுதங்களுடன் ஊர்வலத்தின் துவக்கத்தில் இருந்தே கலந்து கொண்டு, வன்முறையை அரங்கேற்றினார்கள். போலீஸாரை ஓட ஓட விரட்டி கடுமையாகத் தாக்கி, கற்களை எறிந்து காட்டுமிராண்டித் தனத்தில் ஈடுபட்டார்கள்.

இதை அடுத்தே துப்பாக்கிச் சூடு அளவுக்கு அன்றைய தினம் சென்றது. 144 தடை உத்தரவு இருக்கும் போது, இப்படி எல்லாம் வன்முறையில் ஈடுபட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தப் படும் என்பது அந்த ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும், ஊர்வலத்தில் வன்முறையை நடத்தச் சொல்லி தூண்டிவிட்டவர்களுக்கும் தெரியாமலா இருக்கும்.

இதனால்தான் ரஜினி காந்த் தனது கருத்தை தெளிவாகச் சொன்னார். போராட்டம் வேண்டாம், எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும். போலீஸார் மீது வன்முறையில் ஈடுபட்டதால் தான் துப்பாக்கிச் சூடு வரை சென்றது என்று தமிழகத்தின் நலன் கருதி தொலைநோக்கோடு ரஜினி சொன்ன கருத்தை கடுமையாக எதிர்த்தார்கள் அரசியல்வாதிகள் சிலர். குறிப்பாக சீமான் உள்ளிட்டவர்கள். எவரெல்லாம் ரஜினியின் கருத்தை எதிர்த்தார்களோ அவர்கள் எல்லோருமே சமூக விரோதிகள்தான் என்று ஒரு தரப்பு ஆணித்தரமாக தங்கள் கருத்துகளைக் கூறியது.

இந்நிலையில், கமல்ஹாசன் தாமும் ஒரு சமூக விரோதிதான் என்பதை, ரஜினியின் கருத்தை மறுதலித்து, போராட்டம் வேண்டும் என்று சமூகத்தை பதற்றத்தில் தள்ளி உறுதிப் படுத்தியிருக்கிறார்.

மேலும், ரஜினியின் கருத்து தனிப்பட்ட கருத்து என்று கூறியிருக்கிறார் கமல்ஹாசன். ரஜினி இதுவரை கட்சி தொடங்கவில்லை. அவர் எந்த அமைப்பிலும் இல்லை. அமைப்பு ரீதியாக இயங்கவும் இல்லை. ரஜினி இதுவரையிலும் ஒரு தனிநபர்தான். அவர் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் தனிப்பட்ட வகையில் அவர் சொல்வது தான்! அப்படி இருக்கும் போது, ரஜினியின் கருத்தை தனிப்பட்ட கருத்து என்று, அடிப்படை அறிவுகூட இல்லாத நிலையில் கமல்ஹாசன் சொல்வது, அரைவேக்காட்டுத்தனமே அன்றி வேறல்ல என்று விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன.

4 COMMENTS

  1. Iகமல் அவர்களின் கருத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் அவசரகதியில் பதிவிட்டுள்ளார்.
    போராடிய மக்கள் அணைவருமே சமூகவிரோதிகள் எனில் நானும் அப்படி யே என்று சொல்லி யிருக்கிறார். ரஜினி கூட மக்கள் கூட்டத்தில் சில சமூகவிரோதிகள் கலந்துவிட்டார்கள் என்றுதான் சொன்னார். போராடியவர்களை அல்ல. தெளிவாக ப்படிக்கவேண்டும்.

  2. வணக்கம்
    எனக்கு திரு ரஜினியின் அரசியல்ப்ரவேசம் பிடிக்கவில்லை. நான் அவருடைய ரசிகையுமல்லள், ஆன்மீகம் பற்றித் தெளிவில்லாதவர், ஆனால் அவர் தூத்துக்குடியில் போராடியவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று சொல்ல வில்லையே, சில தீவிரவாதிகள் புகுந்து விட்டனர் என்று தானே குறிப்பிட்டுள்ளார், வழக்கம் போல கமல ஹாசன் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்,

  3. It is common knowledge that the peaceful movement was infiltrated by anti-social and anti-national elements aided and abetted by vested interests.Most of these anti-development movements are obviously funded by evangelists with logistics thrown in by Commies.People like Kamalhasan and Prakashraj are also part of this cabal. Govt should keep an eye on these elements and take timely action in the interest of the nation.

  4. தான் ஒரு சமூக விரோதி என்று வாக்குமூலம் அளித்துவிட்டதால் கமலை உடனடியாக கைது செய்து இனி வாயே திறக்க முடியாமல் நன்கு ‘கவனிக்க’ வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories