வரும் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை ஜகார்த்தாவில் நடக்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆண்கள் அணியில் லியாண்டர் பயாஸ், ராம்குயமர் ராமநாதன், பிரஜ்னேஷ் குனேஸ்வரன், சுமித் நகல், ரோஹன் போபண்ணா, திவிஷ் ஷரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் இந்த ஆணைக்கு ஜீலன் அலி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். யு.எஸ் ஓபன் டென்னிஸ் வரும் ஆகஸ்ட் 27 முதல் தொடங்க உள்ளது. இதில் இந்திய வீரர் யுமி பாம்ப்ரி பங்கேற்க உள்ளார். இதனால் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய பெண்கள் அணியில், அன்கிதா ரெய்னா, கர்மன் கவுர் தண்டி, ருதுஜா போசேஸ், பிரஞ்சாலா யத்லபள்ளி ரியா பாட்டியா, பிரார்த்தனா தோம்பரே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த அணிக்கு அன்கிதா பாம்ப்ரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் லியாண்டர் பயாஸ்
Popular Categories



