ஆளுநர்களின் 2 நாள் மாநாடு புது தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆறு அமர்வுகளாக இன்றும், நாளையும் என இரு தினங்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை தொடங்கி வைத்தார்.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அனைத்து மாநில ஆளுநர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் துவக்க உரை நிகழ்த்தினார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!
#PresidentKovind addresses 49th conference of Governors and Lt Governors at Rashtrapati Bhavan; says Governor is a mentor and guide to the state government and an important link in the federal structure pic.twitter.com/j8S9rCkqDQ
— President of India (@rashtrapatibhvn) June 4, 2018
நாட்டின் கூட்டுறவு அமைப்பில் ஆளுநர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே முக்கியப் பங்காற்றுகின்றனர். மாநிலத்தை வழிநடத்தும் மிகப் பெரும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது என்று 49வது ஆளுநர்கள் துணை நிலை ஆளுநர்கள் மாநாட்டில் பேசினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
மாநிலங்களின் வளர்ச்சிப் பாதையில் ஆளுநர்கள் பங்கு, பல்வேறு மாநிலங்களின் 115 மாதிரி மாவட்டங்களில் வேகமான முன்னேற்றம், மத்திய அரசின் நலத் திட்டங்கள் செயல்படுத்தப் படும் விதம், நாட்டின் 10 கோடி எஸ்.டி., மக்களின் வாழ்க்கைத் தரம், பல்கலை வேந்தர்களாக ஆளுநர்கள் மேற்கொள்ள வேண்டிய பணி என பல தலைப்புகளில் உரையாற்ற்றினார் ராம்நாத் கோவிந்த்.
தொடர்ந்து இந்த மாநாட்டில் தூய்மை இந்தியா, உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக விவாதிக்கப்படும். ஆளுநர்கள் பல்கலைக்கழங்களின் வேந்தர்கள் என்ற வகையில், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாடு, சமூக மாற்றத்தில் ஆளுநர்களின் பங்கு ஆகியவை குறித்து இன்று விவாதிக்கப்படுகிறது.
மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவது தொடர்பான அம்சங்கள் நாளைய மாநாட்டில் இடம்பெற உள்ளது. யூனியன் பிரதேசங்களுக்காக நடைபெற உள்ள சிறப்பு அமர்வில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தனியாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.




