மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியோமி ரெட்மீ வ்யை2 ஸ்மார்ட்போன் மாடல் இன்று அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜூன் 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட்போன் மாடல் ரெட்மீ வ்யை2 அல்லது ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் ஆக இருக்க வேண்டும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.
இப்போது ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களில் நிச்சியமாக ஒரு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரெட்மீ வ்யை2 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
ரெட்மீ வ்யை2 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 720பிக்சல்
திர்மானம் மற்றும் 18:9 திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன்
மாடல் வெளிவரும்.
ரெட்மீ வ்யை2 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ரெட்மீ வ்யை2
ஸ்மார்ட்போன்.
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு
ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் பேஸ் அன்லாக் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.



