நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன், ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சியை தொடங்குவதாக கடந்த மாதம் கொல்கத்தாவில் அறிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற விழாவில் தனது கட்சியின் கொடியை அவர் அறிமுகம் செய்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தலைவிரித்தாடும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக கட்சி தொடங்கியுள்ளதாக கூறினார்.
ஊழலை ஒழிக்க கட்சி தொடங்கியுள்ளேன் – முன்னாள் நீதிபதி கர்ணன்
Popular Categories



