தடக வீரர்கள் தங்கள் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும் என ஹரியாணா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள முதல்வர் மனோகர் லால் கட்டாரின் உத்தரவுக்கு வீரர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. அரசின் அறிவிப்புக்கு மாநிலத்தில் உள்ள வீரர்கள், வீராங்கனைகள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து குத்துச்சண்டை வீராங்கனை பபிதா கூறுகையில் ‘‘ஒவ்வொரு நாடும், மாநிலமும் விளையாட்டை ஊக்குவிக்கவும், விளையாட்டு வீர்ர்களை உற்சாகப்படுத்தவும் பல கோடி ரூபாய் பணத்தை செலவழிக்கிறது. ஆனால் இதற்கு மாறாக ஹரியாணா அரசு விளையாட்டு வீரர்களுக்கு தண்டனை வழங்குகிறது’’ எனக் கூறியுள்ளார். இதுபோல ஓலிம்பிக் வீரர் சுஷில்குமார் உள்ளிட்ட வேறு சில விளையாட்டு வீரர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



