புனே: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியிருப்பதாகவும், அதுவும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பாணியில் படுகொலை செய்ய மாவோயிஸ்டுகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாகவும் புனே போலீசார் பகீர் தகவலை வெளியிட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் கோரேகானில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி கோரேகான் போர் வெற்றியின் 200ஆவது ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டது. இந்த நினைவு தினம் கொண்டாடப் பட்ட நாளில் பெரும் வன்முறை வெடித்தது. அது தொடர்பாக பேராசிரியர் சோமா சென் உட்பட 5 பேரை புனே போலீசார் கைது செய்தனர். இந்த 5 பேரையும் காவலில் எடுக்க புனே நீதிமன்றத்தில் போலீசார் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற போது கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் மாவோயிஸ்டுகளுடன் உள்ள தொடர்பு குறித்தும், கைது செய்யப்பட்ட நபர்களின் இ மெயிலில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த பாணியில் பிரதமர் மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டியிருப்பதும் எடுத்துக் கூறப்பட்டது. எனவே இது தொடர்பாக விசாரிக்க இந்த 5 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
புனே போலீசார் அளித்த இந்தத் தகவல், இப்போது நாடு முழுதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருப்பதுடன், பெரும் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.
Pune Police intercepts internal communication of Maoists planning a ‘Rajiv Gandhi type’ assassination of Prime Minister Modi. pic.twitter.com/o2rt2al4aj
— ANI (@ANI) June 8, 2018




