விருத்தாசலத்தில் உள்ள ஏகநாயகர் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கருவேப்பிலங்குறிச்சி செல்லும் வழியில் உள்ளது ஏகநாயகர் கோயில். பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் திருப்பணிகள் நடந்து முடிந்ததை அடுத்து, இன்று கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
இதற்காக மணிமுத்தாற்றில் இருந்து கோயிலுக்கு புனித நீர் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஆற்றில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்து புனித தீர்த்தத்தைக் கலசத்தில் எடுத்து யானை மீது வைத்து ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்.



