கால்வாய்கள் இணைப்பு திட்டத்தில் நடந்த ஊழலில் முதல்வருக்கு தொடர்பு என புகார்

Published:

12 June11 Nellai - 2026தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் நடைபெற்ற ஊழலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி தொடர்பு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் மழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரை வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தாமிரபரணியாறு, நம்பியாறு, திருமேனியாற்றுடன் கால்வாய் தொண்டி இணைக்கும் திட்டத்தில் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இணைப்பு திட்டத்திற்கு பணிகள் நடைபெறாமல் பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது

இந்த ஊழல் குறித்து தமிழக தலைமை செயலாளர் கிரிஷா வைத்தியநாதனுக்கு கடிதம்  எழுதியுள்ளதாக அப்பாவு தெரிவித்துள்ளார். தலைமை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடப்போவதாவும் கூறியுள்ளார்.

மழைக் காலங்களில் அணைகளில் போதிய நீரை சேமித்து வைத்தாலும், தாமிரபரணி  மற்றும் அதன் துணை ஆறுகளிலிருந்து 13.8 டி.எம்.சி  நீர் வீணாக கடலில் கலக்கிறது.  இதனை தடுக்கும் வகையில் வெள்ளநீர் கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தில் தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு, பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு ஆகிய 6 நதிகள் இணைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Related articles

Recent articles

spot_img